வைசாக் வரவழைத்திருந்தோம்.
பெரியபுராணம் பற்றி அல்ல. கண்ணதாசன் பற்றி பேச. ஆனால் முதல் நாள் ஒரு சின்ன மீட்டிங் நாங்கள் சிலபேர் அவருடன் ஆவலுடன் உட்கார்ந்திருந்தபோது அவரிடம் ஒருமுறை பெரியபுராண முதல் பாடலையாவது தாங்கள் சொல்லவேண்டும் என்றேன்.
சேக்கிழாரின் அடிப்பொடியார் ‘உலகெலாம் உணரந்ததோற்கரியவன, நிலவுலாவிய நீர்மலி வேணியன்’ என ஆரம்பித்தவர் திடீரென நிறுத்தினார்.
அது சரி இறைவன் உருவத்தைக் கொஞ்சம் அளந்துபார்க்கலாமா என்று கேட்டார். எங்கும் எதிலும் அமர்ந்து கிடக்கும் இறைவனை யார் அளப்பது? இது என் கேள்வி. நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் இந்தக் கலி விளையாடும் உலகில் சேக்கிழார் அளக்க முயன்றிருக்காரே.. அந்த அளவையும் பார்ககலாமா?
சொல்லுங்கள!
சந்திர கிரகம் எவ்வளவு பெரியது?
பூமியை வட சிறியதுதான் என்றாலும் மிகப் பெரிய பரப்புள்ள கிரகம்
அந்த நிலா கிரகம் சிவனுடைய தலையில் தோட்டத்தில் நடை பழகுவது போல உலா போகின்றானாம். சரி, கங்கை எப்படி பூமிக்கு வரவழைக்கப்பட்டாள் ?
அவள் கோபத்தோடு பூமியை அழித்து விடுவது போல அப்படியே கடல்போல தண்ணீரை அள்ளிக் கொண்டு வந்தாள் இல்லையா? அப்படிப்பட்டவளை தலையை விரித்து தன்னுள் வாங்கிக் கொண்டு தலையை முடித்து ஓர் மயிரிழையில் கங்கையை பூமி மீது விழச் செய்தார்.
சரி. தலையில ஒருபக்கம் இந்த நிலா உலாப் போகுது.. இன்னொரு பக்கம் கங்கையானவள் கடல் போல நீர் மலிந்து அந்தத் தலையையே சுகமாக அனுபவிக்கிறாள். அப்படியானால் இந்த இரண்டையும் தாங்கும் தலை எத்தனை பெரிய சைஸ்?
அம்மாடி.. கற்பனையே பண்ணமுடியாதே..
ஆனால் சேக்கிழாரின் மனதில் இறைவன் இந்தத் தோற்றத்தைக் காண்பித்திருக்கிறானே.. அப்படியானால் சேக்கிழார் எத்தனை பெரிய மகான்…
ஆகா இரண்டு வரிகளுக்குள் இத்தனை ஆழமா?
சேக்கிழார் புகழையே எப்போதும் பேசும் சேக்கிழார் அடிப்பொடி சேக்கிழாரின் மூலம் இறைவனது திருவடிகளை அடைந்துவிட்டார். வாழ்க அவரது புகழ்!