ஆய்ந்தே கடந்தவர் அறிவென்னும் அளக்கர்!

ஸ்ரீராம் குழுமம் நடத்தும் மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழாவில் கண்டு(8.2.2020) பேசினேன் .அப்போது சேக்கிழார் அடிப்பொடி பாரதி பதிப்பு வெளியிட வேண்டும் என்றார். திடுமென மறைந்த செய்தியறிந்து கலங்கினேன் . முதுமுனைவர் டி என் ஆர். (18.8.1934-6.4.2021) அவர்களை நான் அறுபதாண்டுகளாக அறிவேன் என்றால் பலர் வியப்பார்கள் . தஞ்சையில் , சரபோசி மன்னர் கல்லூரியில் நான் பணியில் சேர்ந்த ஆண்டு 1958 . பணியில் சேர்ந்து முடிந்த மறுவருடம் நான் சேக்கிழார் அடிப்பொடி அவர்களின் இல்லத்தில்… Continue reading ஆய்ந்தே கடந்தவர் அறிவென்னும் அளக்கர்!

Published
Categorized as Tribute

வடமொழி தேவபாஷை என்றால் தமிழ் மகாதேவ பாஷை – சைவப்பேராளுமை – தி.ந.இராமச்சந்திரன்

சேக்கிழார் அடிபொடி தி.ந.இராமச்சந்திரன் நேற்று (6-4-21) சென்னையில் காலமானார். திருலோக சீதாராம் ‘சிவாஜி’ என்ற பத்திரிகை ஒன்றை நடத்தினார். அப்போது அதற்குப் பெரியபுராணத்தின் ஒரு பகுதியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொடுத்தார் ஓர் இளைஞர். அப்போது அவரிடம் சிலர், ‘சைவசித்தாந்தம் தெரியுமா?’ என்ற கேள்வியை முன்வைத்தனர். அதற்கு அந்த இளைஞர் ‘தெரியாது’ என்று மிகவும் வெளிப்படையாகக் கூற, சைவ சித்தாந்தம் தெரியாமல் பெரியபுராணத்தை மொழிபெயர்ப்பது சரியல்ல என்று கருத்துத் தெரிவித்தனர். அந்தக் கேள்வியை மிகவும் சரியாகப் புரிந்துகொண்டு சைவ… Continue reading வடமொழி தேவபாஷை என்றால் தமிழ் மகாதேவ பாஷை – சைவப்பேராளுமை – தி.ந.இராமச்சந்திரன்

Published
Categorized as Tribute

டி.என்.ஆர்.: தமிழோடு ஒரு வாழ்க்கை

தஞ்சைத் தமிழறிஞர்களில் முதன்மையாக வைத்துப் போற்றத் தக்க பண்பாளர்களில் ஒருவர் டி.என்.ராமச்சந்திரன். தமிழிலும் ஆங்கிலத்திலும் தோய்ந்த புலமை கொண்ட மொழிபெயர்ப்பாளர். ஆழங்கால் பட ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர், அரிய நூல்களின் பதிப்பாளர், பேச்சாளர், கல்வித் தகுதியால் வழக்கறிஞர், இலவச பக்தி இலக்கிய வகுப்புகள் நடத்திய ஆசான், இப்படிப் பன்முக ஆளுமை கொண்டவர் டி.என்.ஆர். பக்தி இலக்கிய வகுப்புகளில் நாயன்மார்கள் கதைகளைச் சொல்லி நடத்தும்போது, அந்தப் பாடல்களில் ஆழ்ந்து, லயித்து, உணர்ந்து அவர் சொல்கையில் அவரது கண்களில் கண்ணீர்… Continue reading டி.என்.ஆர்.: தமிழோடு ஒரு வாழ்க்கை

Published
Categorized as Tribute

உலகெலாம் உணரந்ததோற்கரியவன, நிலவுலாவிய நீர்மலி வேணியன்

வைசாக் வரவழைத்திருந்தோம். பெரியபுராணம் பற்றி அல்ல. கண்ணதாசன் பற்றி பேச. ஆனால் முதல் நாள் ஒரு சின்ன மீட்டிங் நாங்கள் சிலபேர் அவருடன் ஆவலுடன் உட்கார்ந்திருந்தபோது அவரிடம் ஒருமுறை பெரியபுராண முதல் பாடலையாவது தாங்கள் சொல்லவேண்டும் என்றேன். சேக்கிழாரின் அடிப்பொடியார் ‘உலகெலாம் உணரந்ததோற்கரியவன, நிலவுலாவிய நீர்மலி வேணியன்’ என ஆரம்பித்தவர் திடீரென நிறுத்தினார். அது சரி இறைவன் உருவத்தைக் கொஞ்சம் அளந்துபார்க்கலாமா என்று கேட்டார். எங்கும் எதிலும் அமர்ந்து கிடக்கும் இறைவனை யார் அளப்பது? இது என்… Continue reading உலகெலாம் உணரந்ததோற்கரியவன, நிலவுலாவிய நீர்மலி வேணியன்

Published
Categorized as Tribute

எம் தந்தை என்னும் வரம்

“Sivan is Never Appealed to in Vain” (சிவனை வேண்டினோர் கைவிடப்படார்) என்பது G.U. போப் அருளியது. இதை என் தந்தையார் தம் வாழ்நாள் கொள்கையாகவே கொண்டிருந்தார். இவருடைய அரும் நண்பர் தமிழ்க்கடல் பண்டித வித்துவான் தி.வே. கோபாலய்யர் எதையும் எப்பொழுதும் “எம்பெருமான் திருவுள்ளம்” என்பார். இதுவே என் தந்தையாரின் மாறாச் சிந்தனை. பொதுவாக TNR என்று அன்பர்களால் அழைக்கப்பட்டு வந்த சேக்கிழார் அடிப்பொடி முதுமுனைவர் தி. ந. இராமச்சந்திரன் எம் தந்தையார் என்று அமைந்தது… Continue reading எம் தந்தை என்னும் வரம்

Published
Categorized as Tribute

The infinite effulgence

The fortune of knowing you,A mere ten and six years I had with youmany may deem too little,‘she arrived when twilight was melting into night’, they can belittle I’m no markanda, holding a covenant with The LordFor He didn’t grant our company,everlasting Sodasa.When Kalaa came for youI kicked, screamed and criedLeave him, leave leave him… Continue reading The infinite effulgence

Published
Categorized as Tribute

சேக்கிழார் அடிப்பொடி தி.ந. இராமச்சந்திரன் (டி.என்.ஆர்.)

வ.உ.சி. போல வழக்குரைஞர் தொழிலிலிருந்து இலக்கியத்திற்கு வந்தவர் டி.என்.ஆர். அவரது அன்பர்களில் ஒருவரான துணைப் பதிவாளர் இரா. சுப்பராயலு, டி.என். ஆரின் எண்பதாம் ஆண்டு விழாவின்போது அமுதசுரபியில் (செப்டம்பர் 2014) அவரைப் பற்றி ஓர் அருமையான கட்டுரையை எழுதினார். கவிஞர் ரவிசுப்பிரமணியன் டி.என்.ஆர். குறித்து எடுத்துள்ள மிகச் சிறந்த ஆவணப்படம் அவரது பெருமையை நிரந்தரமாகப் பேசும். டி.என்.ஆர். காலமானார் என்ற செய்தி அறிந்தபோது மனம் துயரத்தில் ஆழ்ந்து அவரைப் பற்றிய நினைவுகளில் மூழ்கியது. தருமை ஆதீன விழா,… Continue reading சேக்கிழார் அடிப்பொடி தி.ந. இராமச்சந்திரன் (டி.என்.ஆர்.)

Published
Categorized as Tribute